வானிலை
நாட்டின் சில மாவட்டங்களுக்கு வெப்ப அபாய எச்சரிக்கை!

மேல் , வடமேல் , வடமத்திய, வடக்கு மற்றும் தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி, மொனராகலை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் இன்றைய தினம் வெப்பநிலை கடுமையாக இருக்கும் என ‘ இயற்கை அபாயங்கள் முன்னெச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.மேல் , வடமேல் வடமத்திய, வடக்கு மற்றும் தென் மாகாணங்கள் மற்றும் இரத்தினபுரியின் சில இடங்களில் வெப்பச் சுட்டெண், மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இயற்கை அபாயங்கள் ஆரம்ப எச்சரிக்கை மையம் எச்சரித்துள்ளது.மனித உடலில் வெப்ப சுட்டெண்ணின் தாக்கம் மேலே உள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது மற்றும் இது சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சின் ஆலோசனையின் பேரில் தயாரிக்கப்பட்டுள்ளது.