வானிலை
இரவு இடியுடன் கூடிய மழை : 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை !

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இன்று (30) இரவு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் ஓரளவு மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.பதுளை, காலி, கண்டி,மாத்தறை, மொனராகலை, நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தொடரும் மழையுடனான வானிலையால், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 5 பிரதேச செயலகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் நாளை (31) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துகளை தவிர்த்துக்கொள்ள முன்னெச்சரிக்கையாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.