உலகம்
ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் உயிரிழப்பு
ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் எலெக்ஸி நவால்னி சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் பிரதான அரசியல் எதிர்வாதியாக கருதப்படும் எலெக்ஸி நவால்னிக்கு 19 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது மயங்கி விழுந்து அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்யாவில் இந்த ஆண்டு மார்ச் 17ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எலெக்ஸி நவால்னி உயிரிழந்தமை அந்நாட்டு அரசியலில் பிரதான பேசுபொருளாக மாறியுள்ளது.