உலகம்
இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை!
அரசின் இரகசியங்களை கசியவிட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது, பரிசுப்பொருள் முறைகேடு, அல்-காதிர் அறக்கட்டளை முறைகேடு மற்றும் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய இரகசிய தகவல்களை கசியவிட்ட சிபர் வழக்கு ஆகிய வழக்குகளில், கடந்த ஆகஸ்ட் 5ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே பரிசுப் பொருள் வழக்கில் விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், அரசின் இரகசியங்களை கசியவிட்ட வழக்கில் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சியின் துணைத் தலைவர் குரேஷிக்கும் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.