Connect with us

Sports

இலங்கை கிரிக்கெட் அணி மீதான தடையை நீக்கிய ஐ.சி.சி

Published

on

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இலங்கை கிரிக்கெட் பேரவையை இடை நீக்கம் செய்வதாக ஐசிசி கிரிக்கெட் அறிவித்து உத்தரவிட்டது.

இலங்கை கிரிக்கெட் அணியில் அரசியல் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தடை செய்யப்பட்டது.

மேலும், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 9 போட்டிகளில் ஆடிய இலங்கை அணி 7 போட்டிகளில் தோல்வி அடைந்தது.

இதற்கிடையே, இலங்கை கிரிக்கெட் பேரவை கலைக்கப்பட்டது.

இதனால், இலங்கை அணியை இடைநீக்கம் செய்து ஐசிசி அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில், இன்று தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இலங்கை கிரிக்கெட் அணி மீதான அனைத்து தடைகளையும் உடனடியாக நீக்குவதாக ஐசிசி அறிவித்துள்ளது.

இடை நீக்கம் செய்யப்பட்டதில் இருந்து இலங்கை கிரிக்கெட் பேரவையின் நடவடிக்கைகளை கவனித்து வருவதாகவும், அதில் அரசின் தலையீடு எதுவும் இல்லை என்பதையும் உறுதி செய்த பின் அதன் மீதான தடை நீக்கப்பட்டதாகவும் ஐசிசி தெரிவித்துள்ளது.