Sports
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நடத்திய உடற்தகுதி பரீட்சையில் சித்தியடைந்த வீரர்…
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் உடற்தகுதியை நிரூபிப்பதற்காக நடத்தப்படும் 2 கிலோ மீற்றர் தூரத்தை 8 நிமிடங்கள் 35 வினாடிகளில் ஓடி முடிக்க வேண்டும் என்ற சவாலில் பெரும்பாலான வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
எனினும் குசல் பெரேரா, தனுஸ்க குணதிலக்க தில்ருவான் பெரேரா மற்றும் பானுக்க ராஜபக்ஸ போன்ற முன்னணி வீரர்கள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை ஓடி முடிக்க தவறியுள்ளதாக கிரிக்கெட் சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் துஸ்மந்த ச்சமிர குறித்த இலக்கை வெற்றிகரமாக குறித்த நேரத்தில் கடந்து அசத்தியுள்ளார்.