உலகம்
இந்தியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டரில் 5.6 ஆக பதிவு
இந்தியாவின் டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் இன்று மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து வீதிகளில் குவிந்தனர். கடந்த 3 நாட்களில் 2-வது முறையாக டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்படுகிறது.நேபாளத்தில் அண்மையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 6.4 அலகுகளாக பதிவாகி இருந்த இந்த நிலநடுக்கத்தால் 200-க்கும் அதிகமானோர் பலியாகினர். நேபாளத்தில் நிலநடுக்கத்துக்குப் பிந்தைய அதிர்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.ஆப்கானிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் ஏற்படுகிற கடும் நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவின் வடபகுதிகளிலும் உணரப்படுவது வழக்கம். நேபாள நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கமும், அதன் பிந்தைய அதிர்வுகளும் டெல்லி, உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.நேபாளத்தில் இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.6 ஆக பதிவானது. இதன் எதிரொலியாக டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் இன்றும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டரில் 5.6 அலகுகளாகப் பதிவாகி இருந்தது. கடந்த 3 நாட்களில் இது 2-வது முறையாகும்.டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹரியானா, பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் இந்த நிலநடுக்கம் கடுமையாக உணரப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்து வீதிகளில் குவிந்தனர். அடுத்தடுத்து நிலநடுக்க அதிர்வுகள் உணரப்படுவதால் வட இந்திய மாநில மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.