Connect with us

Sports

இங்கிலாந்தை மிக இலகுவாக வென்றது இலங்கை..!

Published

on

இங்கிலாந்தை மிக இலகுவாக வென்றது இலங்கை அணி.உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (26) இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின.குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுப்பைத் தெரிவு செய்தது.இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 33.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 156 ஓட்டங்களை பெற்றுள்ளது.துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அணியின் அதிகபட்சமாக 43 ஓட்டங்களை பென் ஸ்டோக்ஸ் பெற்றுக்கொடுத்தார்.பந்து வீச்சில் லஹிரு குமார 03 விக்கெட்டுகளையும் ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் கசுன் ராஜித தலா 02 விக்கெட்டுகளையும் மகேஷ் தீக்ஷனா 01 விக்கெட்டையும் பெற்றுக்கொடுத்தனர்.157 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 25.4 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் Pathum Nissanka ஆட்டமிக்காமல் 77 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றதுடன் Sadeera Samarawickramaவும் ஆட்டமிழக்காமல் 65 ஓட்டங்களை பெற்றார்.