Connect with us

Sports

இந்தியாவுக்கு 192 ரன்கள் இலக்கு…!

Published

on

2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதுகின்றன.

அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் இடம்பெறும் இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் இந்திய அணி வெற்றி பெற்றது.இதற்கமைய, அந்த அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 42.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 191 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக, பாபர் அசாம் 50 ஓட்டங்களையும், மொஹம்மட் ரிஸ்வான் 49 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.பந்துவீச்சில் இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா 19 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.இந்தநிலையில், இந்திய அணி 192 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட தயாராகவுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *