Connect with us

உலகம்

அமெரிக்க கிரீன் கார்ட் விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Published

on

அமெரிக்காவில் கிரீன் கார்ட் விண்ணப்பதாரர்களுக்கு வேலைவாய்ப்பு கால அவகாசம் 5 ஆண்டுகளாக நீடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அறிவித்துள்ளது.

முன்னதாக அதிகபட்ச காலமாக இரண்டு ஆண்டுகளுக்கு மாத்திரமே கிரீன் கார்ட் விண்ணப்பிக்கலாம். இரண்டு ஆண்டு காலம் முடிந்த பின்னர் மீண்டும் நீடிக்க கோரி விண்ணப்பிக்க வேண்டும்.

ஆனால் தற்போது இந்த வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களுக்கான(Employment Authorization Documents) செல்லுபடி காலத்தை 5 ஆண்டுகளாக அதிகரித்துள்ளதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) அறிவித்துள்ளது.

அமெரிக்க கிரீன் கார்ட் விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு | Important Notice For Us Green Card Applicants

கடந்த (27.09.2023) முதல் வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களுக்கு விண்ணப்பித்த தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு இது பொருந்தும் எனவும் இதனால் 2 ஆண்டுகளில் இதனை நீடிக்க வேண்டிய தேவையிருக்காது என தெரிவித்துள்ளது.

கிரீன் கார்ட் விண்ணப்பங்கள் இலட்சக்கணக்கில் நிலுவையில் உள்ள நிலையில், விண்ணப்பதாரர்களுக்கு இந்த கால நீடிப்பு உதவியாகவே அமைவதாகவும் இது அவர்களுக்கு அமெரிக்காவில் தொடர்ந்து பணி புரியும் வாய்ப்பினை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் ஹெச்-1பி, ஹெச்-1சி, ஹெச்-2ஏ, ஹெச் -2பி, ஹெச்-3 விசா வைத்திருப்பவர்களின் கணவன் மற்றும் மனைவிக்கும் விருப்ப நடைமுறை பயிற்சி (OPT) திட்டத்தின் கீழ் உள்ள சர்வதேச மாணவர்களுக்கும் இந்த நீடிப்பு காலம் பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *