Sports
உலகக்கோப்பையில் இந்தியாவின் பந்துவீச்சுக்கு அடிபணிந்த அவுஸ்திரேலியா!
உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலியா 199 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. இந்தியா-அவுஸ்திரேலியா சென்னையில் நடந்து வரும் உலகக்கோப்பை 5வது போட்டியில் இந்தியா-அவுஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றன.முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணியில் மிட்செல் மார்ஷ் ஓட்டங்கள் எடுக்காமல் 2வது பந்திலேயே அவுட் ஆனார்.அதன் பின்னர் களம் கண்ட ஸ்டீவன் ஸ்மித்நிதானமான ஆட்டத்தினை கடைபிடித்தார். வார்னர் – ஸ்மித் கூட்டணி 69 ஓட்டங்கள் சேர்த்தது. 41 ஓட்டங்கள் எடுத்திருந்த வார்னர், குல்தீப் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
ஜடேஜா மிரட்டல்அடுத்த வந்த லபுசாக்னே விக்கெட் விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என கவனமாக ஆடினார். இதன்மூலம் அவுஸ்திரேலிய அணி 100 ஓட்டங்களை கடந்தது.ஆனால் 28வது ஓவரை வீசிய ஜடேஜா அவுஸ்திரேலியாவுக்கு செக் வைத்தார். ஸ்மித்தை 46 ஓட்டங்களில் ஆட்டமிழக்க செய்த அவர், லபுசாக்னேவை 27 ஓட்டங்களில் வெளியேற்றினார்.அதனைத் தொடர்ந்து அலெக்ஸ் கேரியும் LBW முறையில் ஜடேஜா ஓவரில் ஓட்டங்கள் எடுக்காமல் ஆட்டமிழந்தார். கிரீனை 8 ஓட்டங்களில் அஸ்வினும், கம்மின்ஸை 15 ஓட்டங்களில் பும்ராவும் வெளியேற்றினர்.
ஆனால் மிட்செல் ஸ்டார்க் இந்திய அணிக்கு தலைவலி கொடுத்தார்.அவர் 35 பந்துகளில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 28 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆக, அவுஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் 199 ஓட்டங்களுக்கு சுருண்டது.இந்திய அணியின் தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் குல்தீப் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.