Uncategorized
மழை காரணமாக அழிவடைந்த நெற்பயிர்களுக்கு இழப்பீடு
கடும் மழை காரணமாக அழிவடைந்த நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் தங்காலை – நேடொல்பிட்டிய உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு மழையினால் சேதமடைந்த வயல்களை அவதானிப்பதற்காக விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய நட்டஈடு வழங்கப்படும் எனவும், இது தொடர்பில் விவசாய மற்றும் விவசாய காப்புறுதி சபையுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.