உலகம்
ரஷ்ய படை அதிகாரிகள் பயணித்த கார் வெடித்து சிதறியது
ரஷ்ய உயரதிகாரிகள் பயணித்த கார் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கார் வெடித்துச் சிதறியுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.ரஷ்ய படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட ஓலேஷ்கி, கெர்சன் பிராந்தியம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலில் FSB படை வீரர் ஒருவர் ஸ்தலத்தில் கொல்லப்பட்டதுடன் மற்றவர் படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். காருக்கு பாதுகாப்பாக இருந்த ரஷ்ய வீரர்கள் 3 பேர் காயமடைந்தனர்.
முக்கிய ஆக்கிரமிக்கப்பட்ட ஸ்காடோவ்ஸ்கில், வடிகட்டுதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் உக்ரைனிய குடிமக்களை சித்திரவதை செய்வதற்கும் அவர்கள் ஓலேஷ்கிக்கு வருகை தந்ததாக உக்ரைன் படைத்தரப்பு தெரிவித்துள்ளது