உலகம்
மொராக்கோ நிலநடுக்கம்: சுமார் 632 பேர் உயிரிழப்பு – சுனாமி ஆபத்து குறித்து வெளியான தகவல்
மொராக்கோவைத் தாக்கிய நிலநடுக்கத்தில் சுமார் 632 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 329 பேர் காயமடைந்துள்ளதாகவும் உள்துறை அமைச்சகத்தை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதேவேளை மொராக்கோவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் பல்லாயிரக்கணக்கான பின்அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ள போதும் சுனாமி ஆபத்து எதுவும் இல்லை என மொராக்கோ நில அதிர்வு கண்காணிப்பு சேவையின் தலைவர் கூறியுள்ளார்.
எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் சட்டம்: வெளியானது அதிவிசேட வர்த்தமானிஇரண்டாம் இணைப்புநூற்றுக்கணக்கானோரை பலி கொண்ட நிலநடுக்கம் மொராக்கோவின் மையப்பகுதியில் உள்ள அட்லஸ் மலைப்பகுதியில் உள்ள மரகேஷ் நகருக்கு அருகில் உள்ள ஆறு மாகாணங்களில் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மொராக்கோவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அனுதாபம் தெரிவித்துள்ளார்.
மொராக்கோவில் நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளமை மிகுந்த வேதனையளிப்பதாக நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.