உலகம்
கொலம்பியாவில் பாரிய நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்
கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதையடுத்து மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
நேற்று (17.08.2023) ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது முதலில் 6.3 ரிக்டர் அளவிலும், அதன்பின் 5.7 ரிக்டர் அளவிலும் பதிவானதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் கட்டடங்களில் ஏற்பட்ட விரிசல் காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Continue Reading