Connect with us

உலகம்

அமெரிக்க பயணத்திற்கு பதிலடி கொடுத்த சீனா: அதிரும் தாய்வான் எல்லைகள்

Published

on

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக அமெரிக்கா வெளியிட்ட கண்டனத்தைத் தொடர்ந்து சீனா, தாய்வானை சுற்றி புதிய இராணுவ கூட்டுப் பயிற்சியை ஆரம்பித்துள்ளது.அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா தலைவர்கள் நடத்திய கேம்ப் டேவிட் மாநாட்டின் முடிவில் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில் சீனாவுக்கு எதிரான வலுவான நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, தாய்வானை சுற்றியும் சீனா வலுவான இராணுவ பயிற்சியை ஆரம்பித்துள்ளது.இம்முறை சீனாவால் நடத்தப்படும் இந்த கூட்டு இராணுவ பயிற்சியானது தாய்வானின் வான், மற்றும் கடல் எல்லைகளின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றும் திறனுக்குரிய ஒரு போர் பயிற்சி என சீனா பகிரங்க அறிவிப்பொன்றை விடுத்திருந்தது.

இந்த பயிற்சிகள் சீன இராணுவத்தின் உண்மையான போரிடும் திறனைச் சோதிக்கும் நோக்கத்தினையும், தாய்வானுக்கு சீனா வழங்கும் எச்சரிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.