உலகம்
மூன்றாம் சார்ள்ஸ் அரசராக மூடி சூட்டிக்கொண்டார்.
முடிசூட்டு விழாவின்போது, மறைந்த இரண்டாம் எலிசபெத் முடிசூட்டிக் கொண்ட புனித எட்வர்ட் கிரீடத்தை, அரசர் மூன்றாம் சார்ள்ஸ் சூட்டிக்கொண்டு கையில் செங்கோல் ஏந்தி அரியணையில் அமரும் அவருக்கு புனித எட்வர்ட் மணிமகுடம் அணிவிக்கப்பட்டு முடிசூட்டப்பட்டது.மற்றொரு கையில் தடி ஏந்தி அவர் ஆட்சிப்பொறுப்பை முறைப்படி ஏற்றுக்கொண்டார்.கடந்த 1953ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் திகதி மறைந்த இரண்டாம் எலிசபெத் பதவியேற்றுக் கொண்டார். சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டனில் மன்னர் முடிசூடும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. உலக நாட்டுத் தலைவர்கள் உள்ளிட்ட 2 ஆயிரம் பேர் கலந்து கொண்ட நிலையில் இலங்கை சார்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டார்.இந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 100 முக்கியத் தலைவா்கள், 203 நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு நாடுகளின் அரச குடும்ப உறுப்பினா்கள் பங்கேற்றுள்ளனா்.எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக பிரிட்டன் அரசியாக இருந்த இரண்டாம் எலிசபெத், கடந்த ஆண்டு செப்டம்பரில் மறைந்தாா். இரண்டாம் எலிசபெத் மறைவைத் தொடா்ந்து மூத்த மகன் சாா்ள்ஸ் கடந்த நவம்பரில் அரியணையேறிய நிலையில் இன்று முறைப்படி முடிசூட்டிக்கொண்டார்.