Connect with us

Uncategorized

இலங்கையை வென்ற நியூசிலாந்து

Published

on

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 41.3 ஓவர்களில் 157 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இலங்கை அணி சார்பாக பெதும் நிஸ்ஸங்க 57 ஓட்டங்களை பெற்றார்.

நியூசிலாந்து அணி சார்பாக மெட் ஹென்றி 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், ஹென்றி ஷிப்லி 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 159 ஓட்டங்களை பெற்று இன்றைய போட்டியில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து அணி சார்பாக வில் யங் ஆட்டமிழக்காமல் 86 ஓட்டங்களைப் பெற்றார்.

அதன்படி, நியூசிலாந்து அணி 2 – 0 என்ற கணக்கில் ஒருநாள் போட்டித் தொடரை வென்றது.

இந்நிலையில் உலகக் கிண்ணத்திற்கான முதல் 10 அணிகளுடன் இணையும் வாய்ப்பை இலங்கை அணி இழந்தமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *