உலகம்
ஜப்பான் நிதியுதவியுடன் பங்களாதேஷில் முதல் மெட்ரோ ரயில் சேவை ஆரம்பம்

பங்களாதேஷ் அதன் தலைநகரில் முதல் மெட்ரோ ரயில் சேவையை இயக்கத் தொடங்கியுள்ளது, அதிகரித்து வரும் சன நெரிசலைக் குறைக்கும் நோக்கிலேயே இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
நவீன முறையிலு தரமுயர்த்தப்பட்ட ரயில்வே வலையமைப்பு கிட்டத்தட்ட ஒரு தசாப்தமாக வளர்ச்சியில் உள்ளது மற்றும் 2030 க்குள் 100 க்கும் மேற்பட்ட நிலையங்கள் மற்றும் ஆறு வழித்தடங்கள் பங்களாதேஷின் திட்டத்தில் உள்ளடங்கியுள்ளன.
டாக்காவை சூழவுள்ள உள்ள பிரதான மையங்களை நகர மையத்துடன் இணைக்கும் முதல் திட்டத்தின் ஒரு பகுதியில் புதன்கிழமை இதன் செயல்பாடுகள் தொடங்கியது. இது $2.8 பில்லியன் செலவில் கட்டப்பட்டது, ஜப்பானிய அபிவிருத்தி நிதியினால் நிதியளிக்கப்பட்டே இது தொடரப்படுகின்றது.