Connect with us

Sports

இந்திய அணியுடனான போட்டித்தொடரில் இலங்கை உத்தேச அணி அறிவிப்பு.

Published

on

எதிர்வரும் இந்திய சுற்றுப்பயணத்தில் இலங்கையின் ஒருநாள் மற்றும் டி20 உத்தேச அணி என்று சண்டே டைம்ஸ் இணையத்தளம் அண்மையில் அணியொன்றறை வெளியிட்டுள்ளது.

இந்த அணியில் இந்த நாட்களில் LPL போட்டித் தொடரில் சிறப்பாக செயல்படும் பல வீரர்களும் உள்ளனர். இதன்படி, 10 மாத காயத்தின் பின்னர் அவிஷ்க பெர்னாண்டோ இலங்கை தேசிய அணியில் இணைந்துள்ளதுடன், காயத்தின் பின்னர் டில்ஷான் மதுசங்கவும் மீண்டும் அணியில் இணைந்துள்ளார். மேலும், LPL போட்டியில் சிறப்பாக செயல்பட்ட நுவன் துஷார, சதீர சமரவிக்ரம போன்ற வீரர்கள் மீண்டும் இலங்கை அணிக்கு அழைக்கப்பட்டதோடு, ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் இருந்து விலகிய சாமிக்க கருணாரத்னவும் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, இலங்கை அணி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாக சண்டே டைம்ஸ் இந்த அணியை உத்தேச அணியாக வெளியிட்டுள்ளது.

பத்தும் நிஸ்ஸங்க.
குசல் மெண்டிஸ்
தனஞ்சய டி சில்வா
சரித் அசலங்க
தசுன் ஷனக (தலைவர்)பானுக ராஜபக்ச (டி20)
அஷேன் பண்டார
நுவனிது பெர்னாண்டோ (ODI)
சதீர சமரவிக்ரம
வனிந்து ஹசரங்க
துனித் வெள்ளாலகே
மகேஷ் தீக்ஷன
ஜெஃப்ரி வாண்டர்சே (ODI)
கசுன் ராஜித
லஹிரு குமார
பிரமோத் மதுஷான்
தில்ஷான் மதுஷங்க
நுவன் துஷார (டி20)
சாமிக்க கருணாரத்ன
அவிஷ்க பெர்னாண்டோ

மேலும், இப் போட்டியில் கலந்துகொள்ளவுள்ள இலங்கை அணி எதிர்வரும் 29ஆம் திகதி இந்தியா புறப்படவுள்ளதுடன், இந்த சுற்றுப்பயணத்தில் மூன்று இருபதுக்கு இருபது போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் அடங்குகின்றன.
போட்டிகள் ஜனவரி 3ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *