Connect with us

Uncategorized

தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தம்

Published

on

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

தபால் திணைக்களத்தின் காணிகள் மற்றும் கட்டிடங்கள் தனியாருக்கு வழங்கல், தபால் திணைக்களத்தை தனியார் மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஒரு நாள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் உரிய பதில் வழங்காவிட்டால் எதிர்காலத்தில் கடுமையான தொழில்சார் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன கருத்து தெரிவிக்கும் போது இன்று பணிக்கு வராத ஊழியர்களுக்கு ஊதியமின்றி விடுமுறை அளிக்கப்படும் என்றார். நாடு தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு அவர்களின் கோரிக்கைகள் நியாயமற்றவை என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.