உலகம்
அமெரிக்காவில் பொலிஸாரால் இலங்கை இளைஞர் சுட்டுக் கொலை.

அமெரிக்க பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் இலங்கை வம்சாவளியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
33 வயதான ராஜன் முனசிங்க என்ற தொழில்நுட்ப துறையின்யில் வேலைபார்ப்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் கடந்த மாதம் 15ஆம் திகதி உல்லாசப் பயணத்தை முடித்துக் கொண்டு தனது வீட்டுக்குத் திரும்பிய போது, தனது வீட்டில் கொள்ளைச் சம்பவம் இடம்பெறும் என சந்தேகமடைந்து, கையில் துப்பாக்கியுடன் வீட்டின் முன் வாசலில் இருந்து மண்டபத்திற்கு வந்துள்ளார். .
அப்போது, உடனடியாக அந்த இடத்திற்கு வந்த ஆஸ்டின் காவல்துறை அதிகாரி ஒருவர் கையிலிருந்த துப்பாக்கியை கீழே இறக்கிவிட்டு அவரை சுட்டுக்கொன்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆயுதத்தை கைவிடுவதற்கு நியாயமான கால அவகாசம் வழங்கப்படுவதற்கு முன்னரே அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், அப்பகுதியில் குற்றச் செயல்கள் அதிகம் இடம்பெற்றதனால், ராஜ் தனது பாதுகாப்பிற்காக துப்பாக்கி ஒன்றை பெற்றுக்கொண்டதாகவும் அவரது உறவினர்கள் வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
ஆனால், சாம்பல் நிற சட்டை மற்றும் இருண்ட பேன்ட் அணிந்த மர்ம நபர் ஒருவர் ரயில் தண்டவாளத்தை பார்த்தவாரு தெருவில் அங்கும் இங்கும் நடந்து செல்வதாக 911 எனும் அவசர பொலிஸ் இலக்கத்துக்கு முறைப்பாடு கிடைத்ததாக ஆஸ்டின் போலீசார் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.
பின்னர், துப்பாக்கியால் சுடப்பட்ட ராஜை மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கையை காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர், அங்கு அவர் உயிரிழந்தார்.