Sports
6 தங்கப்பதக்கங்கள் உட்பட 21 பதக்கங்கள் சுவீகரித்த இலங்கை

இந்த ஆண்டுக்கான உலகக் கிண்ண சமயல் போட்டியில் இலங்கை 21 பதக்கங்களை வென்றுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் உலகக் கிண்ண சமயல் போட்டி இம்முறை 55 நாடுகளைச் சேர்ந்த சமையல் கலைஞர்கள் பங்கேற்று லக்சம்பேர்க்கில் நடைபெற்றது.
இதில் இலங்கையின் சார்பில் 11 சமையல் கலைஞர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் 06 தங்கப் பதக்கங்கள், 06 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 09 வெண்கலப் பதக்கங்களை இலங்கை சமையற்காரர்களை கொண்ட அணியால் வெற்றிகொள்ள முடிந்தது.
பதக்கங்களை வென்ற இலங்கை சமையல் கலைஞர்கள் குழு இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்ததுடன், இந்த சாதனைகள் இலங்கைக்கு உலக சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் என இலங்கை சமையற்காரர் அணியின் தலைவர் திமுத்து குமாரசிங்க தெரிவித்தார்.
எதிர்காலத்தில் இலங்கையின் சுற்றுலாத்துறையை உயர்த்துவதற்கு இந்த சாதனைகள் பெரிதும் உதவும் என அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேலும் தெரிவித்தார்