Connect with us

உள்நாட்டு செய்தி

காசல் வீதி வைத்தியசாலையில் மீண்டும் மின் துண்டிப்பு? , பிரசவ நடவடிக்கைகள் பாதிப்பு.

Published

on

170 இலட்சம் மின்கட்டணத்தை உடனடியாக செலுத்தாவிட்டால் முன்னறிவிப்பு இன்றி மின்சாரம் துண்டிக்கப்படும் என கோட்டை காசல் வீதியிலுள்ள மகளிர் வைத்தியசாலைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கு சுகாதார அமைச்சினால் எவ்வித ஏற்பாடும் கிடைக்காததால் பல மாதங்களாக மின்சார கட்டண நிலுவை குவிந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஊழியர்களின் சம்பளம் வழங்கியதன் பின்னர் மின்கட்டணத்திற்கான பணத்தை வழங்குவதாக சுகாதார அமைச்சு உறுதியளித்துள்ளதாகவும், ஊழியர்களின் சம்பளம் (25) வழங்கப்பட்டதால், மின்கட்டணத்திற்கான பணம் பெற்றுக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் பேச்சாளர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அடுத்த வாரத்திற்குள் மின் கட்டணத்தை செலுத்தாவிட்டால், கோட்டை வீதி மகளிர் வைத்தியசாலையில் மின்சாரம் துண்டிக்கப்படும் என, பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *