Uncategorized
வந்தார் சோல்ஹைம்

ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் வேலைத்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எரிக் சோல்ஹைம்(Erik Solheim) இன்று(10) பிற்பகல் நாட்டை வந்தடைந்தார்.
இந்தியாவின் சென்னை நகரிலிருந்து அவர் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
இந்திய விமானச் சேவைக்கு சொந்தமான AI 271 விமானத்தில் இன்று(10) பிற்பகல் 2.13 மணிக்கு அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலைய கடமைநேர முகாமையாளர் தெரிவித்தார்.
Erik Solheim, கடந்த யுத்த காலத்தின் போது நோர்வேயின் அமைதிக்கான பிரதிநிதியாக இலங்கைக்கு பல தடவைகள் விஜயம் மேற்கொண்டிருந்தார்.