Connect with us

Sports

சாம்பியனாகும் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள்: ICC

Published

on

அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஐசிசி உலகக்கிண்ண T20 தொடருக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

அதன்படி, சாம்பியனாகும் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இறுதிப் போட்டியில் தோல்வியுற்று இரண்டாம் இடத்தை பெறும் அணிக்கு 8 இலட்சம் அமெரிக்க டொலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

அதேபோல், அரையிறுதியில் வௌியேறும் அணிகளுக்கு தலா 4 இலட்சம் அமெரிக்க டொலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளன.

சுமார் ஒரு மாதக் காலமாக இடம்பெறவுள்ள இப்போட்டியில் மொத்தமாக 5.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது.