Uncategorized
15ம் திகதி முதல் தபால் கட்டணங்கள் திருத்தம்?
எதிர்வரும் 15ம் திகதி முதல் தபால் கட்டணங்கள் திருத்தம் செய்யப்பட உள்ளது.
இதன்படி 15 ரூபாவாக உள்ள சாதாரண கடிதத்திற்கான தபால் கட்டணம் 50 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
பதிவு செய்யப்பட்ட தபால் கட்டணம் 45 ரூபாவில் இருந்து 110 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
அத்துடன் 250 கிராம் எடையுள்ள பொருட்களுக்கான சரக்கு கட்டணம் 200 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.