உலகம்
வடக்கு பிலிப்பைன்ஸில் 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

வடக்கு பிலிப்பைன்ஸில் உள்ள அப்ரா மாகாணத்தைச் சுற்றிய மலைப் பகுதியில் இன்று 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் மற்றும் வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றாலும், அதிகளவில் பொருட் சேதங்கள் ஏற்படுத்தி உள்ளது என்றும் பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸில் உலகின் பெரும்பாலான பூகம்பங்கள் ஏற்படுகிறது.
இது உலகின் மிகவும் பேரழிவு பாதிப்புக்குள்ளாகும் நாடுகளில் ஒன்றாகும்.
1990ல் வடக்கு பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 2,000 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.