Connect with us

Sports

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்: 14 ஆவது முறையாக சாம்பியனான அணி

Published

on

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் லிவர்புல் -ரியல் மெட்ரிட் அணிகள் மோதின.

ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிரம் காட்டினர் .

இரு அணி வீரர்களும் முதல்பாதியில் போராடியும் கோல் அடிக்க முடியவில்லை.

இதனால் ஆட்டத்தின் முதல் பாதி 0-0 என்ற கணக்கில் இருந்தது . இதனை தொடர்ந்து தொடங்கிய 2வது பாதியில் ஆட்டத்தின் 59 வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் வினி ஜேஆர் ஒரு கோல் அடித்தார் .

இதனால் ரியல் மெட்ரிட் அணி 1-0 என முன்னிலை பெற்றது .

இதற்கு பதிலடி கொடுக்க எதிரணி வீரர்கள் கடைசி வரை போராடியும் பலனில்லை .

இதனால் ரியல் மாட்ரிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் சாம்பியன் பட்டம் வென்றது .

இது அந்த அணி வெல்லும் 14-வது ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் பட்டம் ஆகும் .

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *