Connect with us

Uncategorized

கண்டி மாவட்டத்தில் உருளைக்கிழங்கு செய்கை வெற்றி

Published

on

கண்டி மாவட்டத்தில் உருளைக்கிழங்கு செய்கையை அறிமுகப்படுத்தும் புதிய முன்னோடித் திட்டத்தை மத்திய மாகாண விவசாயத் திணைக்களம் ஆரம்பித்துள்ளதாக மத்திய மாகாண விவசாய திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் ரணதுங்க பண்டார தெரிவித்துள்ளார்.

நுவரெலியா, யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட உருளைக்கிழங்கு பயிர்ச்செய்கையை அறிமுகப்படுத்தும் நோக்கில் பல கட்டங்களின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட முன்னோடித் திட்டம்வெற்றியடைந்திருப்பதாகவும்  அவர் கூறினார்.

இதன் கீழ் கண்டி மாவட்டத்தின் ரங்கல மற்றும் தங்கப்புவ ஆகிய பிரதேசங்களில் உருளைக்கிழங்கு செய்கை ஆரம்பிக்கப்பட்டு அறுவடை நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அறிமுகத் திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் மண்  வளம் மற்றும், காலநிலை  ஆகியவை உருளைக்கிழங்கு செய்கைக்கு மிகவும் பொருத்தமானது என விவசாய ஆலோசகர் எச்.எஸ்.பி. திரு.குணதிலக்க தெரிவித்துள்ளார்.

விவசாயத் திணைக்களத்தினால் சௌபாக்ய உற்பத்தித் திட்டத்தின் கீழ் இனங்காணப்பட்ட உருளைக்கிழங்கை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு உருளைக்கிழங்கு விதைகளும், பொருத்தமான கரிம உரங்களும் வழங்கப்பட்டுள்ளதாக விவசாய ஆலோசகர் குறிப்பிட்டுள்ளார்.

பத்து ஏக்கர் நிலத்தில் ஐம்பது விவசாயிகளின் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்ட உருளைக்கிழங்கு பயிர்செய்கையை மேலும் விரிவுபடுத்தவும் விவசாயத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

1970 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உருளைக்கிழங்கு செய்கை நாட்டின் பிரதான பயிராக மாறியுள்ளது. தற்போது கற்பிட்டி யாழ்ப்பாணம், நுவரெலியா போன்ற பிரதேசங்களில் அதிகளவில் மேற்கொள்ளப்படுகின்றது.