Connect with us

உலகம்

அமெரிக்காவில் ஒரே நாளில் 32 ஆயிரத்து 114 பேருக்கு கொரோனா

Published

on

உலகம் முழுவதும் நேற்று ஒரு நாளில் 10 லட்சத்து 93 ஆயிரத்து 799 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இதன் மூலம் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49 கோடியே 61 லட்சத்து 58 ஆயிரத்து 138 ஆக அதிகரித்துள்ளது.

11 லட்சத்து 24 ஆயிரத்து 113 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தனர்.

இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 43 கோடியே 18 லட்சத்து 51 ஆயிரத்து 996 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் நேற்று ஒரு நாளில் 3 ஆயிரத்து 456 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 61 லட்சத்து 94 ஆயிரத்து 809 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக அமெரிக்காவில் ஒரே நாளில் 32 ஆயிரத்து 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .

மேலும் ஒரே நாளில் 403  பேர் உயிரிழந்துள்ளனர்.