Sports
பெய்ஜிங் குளிர்கால பாராலிம்பிக்ஸில் தடைக்குள்ளான நாடுகள்

சர்வதேச பாராலிம்பிக் குழு பெய்ஜிங் குளிர்கால பாராலிம்பிக்ஸில் ரஷியா மற்றும் பெலாரஸ் விளையாட்டு வீரர்கள் தடை செய்யப்பட்டுள்ளனர் என அறிவித்துள்ளது.
2022 பெய்ஜிங் பாராலிம்பிக் குளிர்கால விளையாட்டுகளில் ரஷியா மற்றும் பெலாரஸ் விளையாட்டு வீரர் நடுநிலையாக பங்கேற்பதாகவும், அவர்கள் பாராலிம்பிக் கொடியின் கீழ் போட்டியிடுவார்கள் மற்றும் பதக்க அட்டவணையில் சேர்க்கப்பட மாட்டார்கள் என சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி அறிவித்திருந்தது.
இதுகுறித்து உக்ரேனிய விளையாட்டு வீரர்கள் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டனர், பாராலிம்பிக்கின் இந்த முடிவு கடுமையான விமர்சனத்திற்கும் உள்ளானது.
இதை அடுத்து இன்று, உக்ரைனில் நடைபெற்று வரும் போரை மேற்கோள் காட்டி, பெய்ஜிங் குளிர்கால பாராலிம்பிக்ஸில் ரஷியா மற்றும் பெலாரஸ் விளையாட்டு வீரர்கள் தடை செய்யப்பட்டுள்ளனர் என சர்வதேச பாராலிம்பிக் குழு அறிவித்துள்ளது.
இந்த விளையாட்டுகளின் ஒருமைப்பாட்டைக் காக்க இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.