உள்நாட்டு செய்தி
அருந்திக்க பெர்ணான்டோவின் மகன் கைது

ராகமை மருத்துவ பீட மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில், இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராகமை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததை அடுத்தே, அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
23 வயதான அவிந்த ரன்தில ஜேஹான் பெர்ணான்டோ, தனது சட்டத்தரணி ஊடாக நேற்றிரவு (02) ராகமை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இந்த தாக்குதலை நடத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட BMW கார், களுபோவில பகுதியிலிருந்து தமது பொறுப்பிற்கு எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது.
சந்தேகநபரை வெலிசர நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ராகமை மருத்துவ பீட மாணவர்கள் மீது நேற்று (02) அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த நால்வர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்னர்.