பொருளதார நெருக்கடியை வெற்றி கொள்ள இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க தயார் என ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் தெரிவித்துள்ளது. இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை மற்றும் சட்டவாக்க நிலைமைகள் தொடர்பில் ஆராயும் வகையில் நேற்று (02)...
புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தால் தெரிவு செய்யப்பட்டதன் பின்னரான காலப்பகுதியில் மக்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையையும் தனிமனித உரிமையையும் நிலைநாட்ட வேண்டும் என இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு...
பிரிட்டனை யூனிஸ் புயல் தாக்கியதையடுத்து, சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும், பயண திட்டங்களை ரத்து செய்யும்படியும் அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த புயலானது கடந்த 32 வருடங்களில்...
நாட்டுக்கு வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய (EU) அதிகாரிகளுக்கும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிசுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (01) மாலை வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை ஆகியவற்றுக்கிடையிலான ஒத்துழைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான இலங்கையின் ஈடுபாடுகள் தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில், நல்லிணக்க நடவடிக்கைகளின் முன்னேற்றம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் மீளாய்வு, சிவில் சமூகத்துடனான ஈடுபாடு, நிலையான அபிவிருத்தி இலக்கு 16 முன்முயற்சி மற்றும் மனித உரிமைகள் சபையுடனான இலங்கையின் ஒத்துழைப்பு ஆகியவை குறித்து ஐரோப்பிய தூதுக்குழுவுக்கு வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் விளக்கமளித்தார். ஐரோப்பிய ஒன்றியத்துடனான இலங்கையின் உறவுகள் பொருளாதார மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு உட்பட பரந்த அளவிலானதும் மற்றும் பரஸ்பரம் நன்மை பயப்பதுமாகும் என வெளிநாட்டு அமைச்சர் குறிப்பிட்டார். ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி இடமாக ...
ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்டத் தூதுக்குழுவினருக்கும், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பந்தனின் கொழும்பிலுள்ள இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இலங்கையில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்...
இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள GSP+ வரிச் சலுகை மற்றும் அதனால் கிடைக்கும் பிரதிபலன்களை மீள் பரிசீலனைக்கு உட்படுத்துமாறு கோரும் தீர்மானமொன்றை ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றம் நேற்று (10) நிறைவேற்றியது. இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் மறுசீரமைப்பை நிறைவேற்றியமை,...