இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வதுT20 கிரிக்கெட் போட்டி குயின்ஸ்டவுனில் நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் முதலில் இலங்கை அணியை துடுப்பெடுத்தாடுமாறு நியூசிலாந்து அணி அழைத்தது....
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை பிற்போட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்
ஆபாசப்பட நடிகையுடனான தொடர்பை மறைப்பதற்காக பணம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். நியூயார்க்கில் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் அமெரிக்க நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு...
எதிர்வரும் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஏற்கனவே, திட்டமிட்டபடி,...
இலங்கை தலைமன்னாரில் இருந்து தமிழகம் தனுஷ்கோடி வரை ‘ராமர்பாலம்’ பகுதி ஊடாக கப்பல் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பது தொடர்பிலும், ஆன்மீக சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது சம்பந்தமாகவும் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள்...
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 19000 இற்கும் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
தமிழ், சிங்கள புத்தாண்டு சுபநேரப் பத்திரம் பாரம்பரிய மற்றும் சம்பிரதாய முறைப்படி ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் கையளிக்கப்பட்டது. பாரம்பரிய முறைப்படி மேளதாளத்துடன் கொண்டுவரப்பட்ட சுபநேரப் பத்திரத்தை, புத்தசாசன,...
பதுளையில் இடம்பெற்ற விபத்து தொடர்பான விசாரணைகளுக்காக வலயக்கல்வி செயலாளரின் ஆலோசனைக்கமைவாக மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. மாகாண கல்வி அலுவலக அதிகாரியொருவர், மாகாண கல்விப் பணிப்பாளர் அலுவலகத்தின் இரு அதிகாரிகள் ஆகியோர் குறித்த குழுவில் உள்ளடங்குகின்றனர். இதேவேளை,வாகன...
தான் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதேபோல் தான் ஒருபோதும் பிரச்சித்தமான தீர்மானங்களை மேற்கொள்ளப் போவதில்லை எனவும், மாறாக சரியான தீர்மானங்களையே...
இலங்கையின் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 50.3% ஆக குறைவடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் 50.6% ஆக பதிவாகியிருந்தது.