பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2580 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 232 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், தேர்தல் குறித்த வன்முறை சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக அரச பல்கலைக்கழக ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, அரச பல்கலைக்கழகங்களின் கீழ்...
பிரபல பயண இதழான “Wanderlust” வாசகர்களின் வாக்கெடுப்பின் மூலம் உலகின் மிகவும் கவர்ச்சிகரமான நாடாக இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது.புகழ்பெற்ற Wanderlust Readers Travel Awards சமீபத்தில் லண்டனில் நடைபெற்றது.சுற்றுலாப் பயணிகள் மத்தியில் கவர்ச்சிகரமான மற்றும் மாறுபட்ட...
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு 13ஆம் திகதி புதன்கிழமை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய இவ்விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அனைத்து மாகாண கல்வி செயலாளர்கள் மற்றும் பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது....
சர்வதேச ரீதியாகவும் உள்ளூரிலும் கடும் கண்டனத்திற்கு உள்ளான கொடூரமான சட்டத்தை முற்றாக ஒழிப்பதாக வாக்குறுதியளித்த கட்சி, ஆட்சிக்கு வந்ததன் பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளதாக வடக்கில் தமிழ் அரசியல் கட்சியொன்று குற்றஞ்சாட்டியுள்ளது. “பயங்கரவாத தடைச் சட்டத்தை...
கடவுச்சீட்டு பெறுவதற்காக புதிய இணையவழி முறைமை ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, குடிவரவு – குடியகல்வு இணையத்தளத்திற்குள் பிரவேசித்து கடவுச்சீட்டைப் பெறுவதற்கு ஒரு திகதியை ஒதுக்கிக் கொள்ள முடியும் என குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளர்...
அடுத்தஆண்டு இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு தேவையான சீருடைத் துணிகளை நன்கொடையாக வழங்க சீன அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷென்ஹொங் தெரிவித்துள்ளார். கெப்பிட்டிபொல தேசிய பாடசாலையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த...
நாட்டில் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புகள் நாளை (30) ஆரம்பமாவதாகத் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கமைய, 30, 01 மற்றும் 04 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்காளர்கள் தமது அலுவலகங்களிலுள்ள உறுதிப்படுத்தல்...
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் விசேட தினமாக நவம்பர் 03 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்...
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு வேட்பாளர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் வரதராஜன் பார்த்தீபன் பருத்தித்துறை பொலிஸாராலும் நெல்லியடி பகுதியில்...