முக்கிய செய்தி
யாழ்ப்பாண மக்களுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள எச்சரிக்கை!
எலிக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் நோய் பரவிவரும் பருத்தித்துறை, கரவெட்டி, சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் வயல்கள், சதுப்பு நிலங்கள், வடிகால்களில் வேலை செய்பவர்கள் தமக்குரிய தடுப்பு மருந்துகளை அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளில் பெற்றுக்கொள்ளலாம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்றையதினம் (11-12-2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு பின்னர் பருத்தித்துறை, கரவெட்டி, சாவகச்சேரி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் ஒரு வகையான காய்ச்சல் பரவி வருகின்றது.
இக் காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நான்கு இறப்புக்களும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இரண்டு இறப்புக்களும் ஏற்பட்டுள்ளன.
இறந்தவர்களில் பெரும்பாலானோர் இளம் வயதினராக காணப்படுகின்றனர். இறந்தவர்கள் எல்லா இறப்புக்களும் சுவாசத்தொகுதி பாதிப்பினாலேயே ஏற்பட்டுள்ளது.