களினியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஸ்கூட்டரில் வந்த இருவர் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிசெய்து, உலகிற்குத் திறந்துவிடுவதன் மூலம் பலம்வாய்ந்த ஆசியாவை உருவாக்குவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சுதந்திரமான கடற்பயணத்தை உறுதிப்படுத்தி இலங்கையை...
2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் மீள் பரிசோதனை விண்ணப்பங்களை நாளை (15) முதல் இணையத்தின் ஊடாக (Online) அனுப்பலாம் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விண்ணப்பங்களை எதிர்வரும் 28 ஆம்...
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக பணியாற்றிய இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன அந்த பதவியில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு புதிய பதவி வழங்கப்பட்டதன் காரணமாகவே அவர் இவ்வாறு தலைமைப் பயிற்றுவிப்பாளர்...
இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்ய முன்வந்துள்ள அவுஸ்திரேலிய முதலீட்டாளர்களுடனான ஆரம்ப கலந்துரையாடலொன்று இன்று (14) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் முதலீடு செய்வது...
தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டிடமாக நிர்மாணிக்கப்பட்ட தாமரை கோபுரத்தின் செயற்பாடுகளை நாளை (15) முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தாமரை கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் இவ்வருடம் பெப்ரவரி 28 ஆம் திகதி...
மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உடலம் எடின்பரோ விமான நிலையத்தில் இருந்து லண்டன் விமான நிலையத்தின் ஊடாக பக்கிங்காம் (Buckingham) அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மகாராணியின் பூதவுடல் பக்கிங்காம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது 70...
பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு கூட்டம் இன்று (14) நடைபெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் முற்பகல் 10.30 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. பாராளுமன்றத்தின் எதிர்வரும் வாரத்திற்கான நிகழ்ச்சி நிரல்...
இலங்கை தமிழர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள மறுவாழ்வு முகாமில் 17 கோடியே 17 லட்சம் ரூபாய் செலவில் கடந்த 8 மாதத்தில் 321 தனித்தனி வீடுகள் கட்டப்பட்டு பணிகள் முடிவடைந்து திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது. இதனை முதல்...
மனித உரிமை மீறல் தொடர்பாக தொடர்ந்தும் வழமை போன்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. என்றாலும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவாக வெளிநாட்டு அமைச்சர் அலி சப்ரி தெளிவுபடுத்தினார். ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள்...