உலகம்
அரியாசனத்தில் ஏறும் முன்னர் ஏற்பட்ட சிக்கல்

சுவீடன் நாடு தனது முதல் பெண் பிரதமரை பெற்றதை கொண்டாடுவதற்கு முன்பே அவரது பதவி விலகல், அந்த நாட்டில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து அந்த நாட்டின் புதிய பிரதமராக சோசலிச ஜனநாயக கட்சியின் மூத்த தலைவரான மெக்தலினா ஆன்டர்சன் (வயது 54), நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அந்த நாடு பெண்களுக்கு வாக்குரிமை வழங்கி 100 ஆண்டுகள் ஆன நிலையில் இப்போதுதான் முதன் முதலாக ஒரு பெண் தலைவர் பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இது வரலாற்று சாதனையாக அமைந்தது.
அவரது தேர்வுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கைதட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாடாளுமன்றத்தில் அவரது பட்ஜெட் தோல்வி கண்டது. எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த பட்ஜெட் நிறைவேறியது.
இதையடுத்து மெக்தலினாவின் சிறுபான்மை அரசுக்கு அளித்த ஆதரவை கிரீன் கட்சி அதிரடியாக விலக்கிக்கொண்டது.