உலகம்
பவானிபூர் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி வெற்றி
பவானிபூர் இடைத்தேர்தலில் வெற்றிபெற செய்த மக்களுக்கு மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் பவானிபூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது.
ம்தா பானர்ஜி தான் போட்டியிட்ட பவானிபூர் தொகுதியில் அமோக வெற்றி பெற்றார்.
மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி 84,709 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட பிரியங்கா திப்ரேவால் 26,320 வாக்குகளும் பெற்றனர்.
இதன்மூலம் அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளார் பிரியங்கா திப்ரேவாலை விட 58,832 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
வெற்றி செய்தி அறிவிக்கப்பட்டவுடன் தொண்டர்கள் மத்தியில் பேசிய மம்தா பானர்ஜி, இடைத்தேர்தலில் வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி, பவானிபூர் தொகுதியில் 58,832 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன்.
தேர்தலில் வாக்களித்த பொதுமக்களுக்கும், 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்திய தேர்தல் ஆணையத்திற்கும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
ஏற்கனவே மம்தா பானர்ஜி 2 முறை பவானிபூர் தொகுதியில் வெற்றிபெற்றிருந்தநிலையில், மூன்றாவது முறையாக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.