Uncategorized
லொஹான் ரத்வத்த பதவி விலகியுள்ளார்

லொஹான் ரத்வத்த ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அனுராதபுரம் சிறைச்சாலை வளாகத்தில் முறைகேடானமுறையில் நடந்துகொண்ட ராஜாங்க அமைச்சரை உடனடியாக பதவி விலகுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இத்தாலில் இருந்து இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு இவ்வாறு அறிவித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் அனுராதபுரம் சிறைச்சாலையில் இரண்டு கைதிகளை மிரட்டிய இராஜாங்க அமைச்சரின் நடவடிக்கை குறித்து விசாரணைகள் முடியும் வரை ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக விலகுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் லொஹான் ரத்வத்த ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்