உலகம்
ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பிராந்தியத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் அண்டை நாடுகளான இந்தியா, பாகிஸ்தானிலும் உணரப்பட்டன. இந்தியாவில் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்கள் அதிர்ந்தன.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்துகுஷ் பகுதியில் இன்று அதிகாலை 4.51 மணிக்கு ரிக்டர் அளவில் 4.3 புள்ளியில் நிலநடுக்கம் உண்டானது. இது 17 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்தை உணர்ந்ததும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவதால் மக்கள் பீதியில் உள்ளனர்