வானிலை
இன்றிரவு நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

நாட்டின் பல பகுதிகளில் இன்றிரவு வேளையில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
கிழக்கு, ஊவா, மேல், சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் 75 மில்லீமீற்றருக்கும் அதிக அளவிலான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், மாத்தளை, பொலன்னறுவை, அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழைவீழச்சி பதிவாகக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.