வானிலை
மழையுடனான காலநிலை நாளை முதல் அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்
நிலவும் மழையுடனான காலநிலை நாளை முதல் அதிகரிப்பதற்கான சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மாத்தளை மாவட்டங்களின் சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும்.
வவுனியா, கிளிநொச்சி, மன்னார், அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில பகுதிகளில் பிற்பகல் வேளையில் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுவதாக அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.