உலகம்
காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தி ஐ.நா பொதுச் சபையில் வாக்கெடுப்பு
காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
193 உறுப்பினர்களை கொண்ட பொதுச் சபையில், குறித்த யோசனைக்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, 153 உறுப்பு நாடுகள் காசாவில் உடனடி போர் நிறுத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.
அத்துடன் 10 நாடுகள் எதிராக வாக்களித்ததுடன் 23 நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகியுள்ளன.
அமெரிக்கா, பரகுவே, ஆஸ்திரியா மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட 10 நாடுகள் யோசனைக்கு எதிராக வாக்களித்துள்ளன.
அத்துடன் பிரித்தானியா, ஜேர்மன், இத்தாலி, நெதர்லாந்து மற்றும் உக்ரைன் உள்ளிட்ட 23 நாடுகள் வாக்கெடுப்பில் இருந்து விலகியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வாக்கெடுப்புக்கு முன்னர் கருத்துரைத்த ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதுவர் லிண்டா தோமஸ் க்ரீன் ஃபீல்ட், தற்போது ஏற்படும் எந்த போர் நிறுத்தமும் தற்காலிகமானது என குறிப்பிட்டுள்ளார்.