Sports
இலங்கை கிரிக்கெட் மீதான விசாரணை: முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு
பொது நிறுவனங்களுக்கான நாடாளுமன்ற கோப் குழுவின் சில உறுப்பினர்களும் அதன் தலைவர் ரஞ்சித் பண்டாரவும், இலங்கை கிரிக்கெட் மீதான விசாரணையை தவறாக கையாள்வதாக ஒருவரையொருவர் குற்றம் சுமத்துகின்றன.
இதன் காரணமாக இலங்கை கிரிக்கெட் நெருக்கடி குழப்பமான திருப்பத்தை எடுத்துள்ளது.
இந்த நிலையில் குழுவின் சில உறுப்பினர்கள், இலங்கை கிரிக்கெட் மீதான விசாரணை முடியும் வரை ரஞ்சித் பண்டார குழுவின் தலைவர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளனர்.
ரஞ்சித் பண்டார, இலங்கை கிரிக்கெட்டால் விலை போனவர் போல நடந்து கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கோப் தலைவர், கை சமிக்ஞைகளை பயன்படுத்தி, கடந்த செவ்வாய்க்கிழமை கூட்டத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோப் குழுவில், இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திடம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று அதன் உறுப்பினர்களுக்கு கை சமிஞ்சை மூலம் ரஞ்சித் பண்டார அறிவுறுத்தினார்.
இது சமூக ஊடகங்களில் பரப்பப்படும் காணொளிகளில் இது தெளிவாக தெரிவதாக சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.
இந்த நிலையில் வரவிருக்கும் நாட்களில் இலங்கை கிரிக்கெட் தொடர்பில் கோப் நடத்தும் விசாரணைகளுக்கு பண்டார தலைமை தாங்க அனுமதிக்கப்படக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஸா விதானகே தெரிவித்துள்ளார்.
நவம்பர் 24, 27 மற்றும் 28ஆம் திகதிகளில் கோப் குழுவின் விசாரணைக்காக, இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாகம் அழைக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சி உறுப்பினர் பிரேமநாத் தொல்லவத்தவும் கோப் தலைவரை தற்காலிகமாக வெளியேற்ற வேண்டும் என்று கோரியுள்ளார்.
எனினும் இதற்கு பதிலளித்த பண்டார, விசாரணையை அரசியலாக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முயற்சிப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
தாம், தமது உதடுகளில் விரல்களை வைத்து, பல உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் பேசுவதால், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டதாகவும், சமிஞ்சை மூலம் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தினரை பதிலளிக்க வேண்டாம் என்று கூறவில்லை எனவும் பண்டார குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இந்த விடயம் தொடர்பில் எவ்வித தீர்ப்பையும் வழங்கவில்லை.