Sports
இன்று இலங்கை அணி, நியூசிலாந்தை வென்று பாக்கிஸ்தான் அணிக்கு அரையிறுதி வாய்ப்பை பெற்றுக் கொடுக்குமா?
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியாவில் இடம்பெற்று வருகிறது.
இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் போட்டிகளின் முடிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, அவுஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
மிகுதியாகவுள்ள ஒரு அரையிறுதி இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.
இதில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளில் இரண்டில் ஒன்று அரையிறுதி சுற்றுக்கு செல்லவே அதிக வாய்ப்புள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் இன்று இடம்பெறவுள்ள முக்கியமான போட்டியில் இலங்கை – நியூசிலாந்து அணிகள் பெங்களூருவில் மோதவுள்ளன.
இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் நியூசிலாந்து அணி விளையாடவுள்ளது.
வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.
ஒருவேளை இலங்கை வெற்றி அடைந்து நியூஸிலாந்து தோற்றால்,
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் தங்களது அடுத்த லீக் போட்டிகளில் வென்று முன்னேற வேண்டும்.
அப்போது நெட் ரன் ரேட் அடிப்படையில் சிறந்த அணி அரையிறுதிக்கு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய போட்டியில் நியூஸிலாந்து அணி வென்று 10 புள்ளிகள் பெற்றால்,
அடுத்த போட்டியில் இங்கிலாந்தை பாகிஸ்தான் வென்று 10 புள்ளிகளை பெற்றால் கூட நெட் ரன் ரேட் அடிப்படையில் இரு அணிகளில் ஒன்று முன்னேற உள்ள அதே வேளை பாகிஸ்தான் அணியின் நெட் ரன் ரேட் குறைவாக இருப்பதால் பாரிய ஓட்ட வித்தியாசத்தில் அல்லது குறைந்த ஓவர்களுக்கு Chase செய்து இங்கிலாந்தை வெல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
அதே நேரம் இலங்கை இன்று நியூசிலாந்தை வென்றுவிட்டால் பாகிஸ்தான் அணிக்கு செமி செல்ல அடுத்த போட்டியில் ( pak vs Eng ) சாதாரண வெற்றி ஒன்றை பெற்றாலே போதுமானது.
மேலும் நியூசிலாந்து இலங்கையிடம் இன்று தோற்று, பாக்கிஸ்தான் இங்கிலாந்திடம் தோற்றால் மீண்டும் இரு அணிகளும் 8 புள்ளிகளுடனே காணப்படும்.
ஆனால் நியூசிலாந்து நெட் ரன் ரேட்டில் முன்னணி வகிக்கவே வாய்ப்பு உள்ளது.
அதே நேரம் இன்று போட்டி இடம் பெறும் பெங்களூர் இல் ஓரளவு மழை உடனான வானிலை காணப்படுகிறது.