Connect with us

Uncategorized

அம்பிட்டிய தேரருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Published

on

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு எதிராக தமிழர்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கும் சிங்கள சட்டத்தரணி தனுக்க ரணன்ஞக முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார்.

குறித்த முறைப்பாடானது இன்று(06.11.2023) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்டுள்ளது.

முகநூல் பதிவு மேலும், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் தேரருக்கு எதிராக தாம் ஏற்கனவே முறைப்பாடு செய்திருந்தாலும் இதுவரை அவருக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதையடுத்து, குறித்த தேரருக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தாம் முறைப்பாடொன்றை மேற்கொண்டதாக தமது உத்தியோகப்பூர்வ முகநூல் பக்கத்தில் தனுக்க ரணன்ஞக பதிவினை மேற்கொண்டுள்ளார்.

அம்பிட்டிய சுமனரத்தன தேரர், அண்மை நாட்களில் தமிழர்களுக்கு எதிராக பல கருத்துக்களை முன்வைத்திருந்ததோடு, தமிழர்களை வெட்டுவதாகவும் கூறியிருந்தார்.அத்துடன், சிங்களவர்களுக்கு எதிரான தமிழர்களின் நடவடிக்கைகளை பொலிஸார் எதிர்க்காமை குறித்தும் அவர் அதிருப்தி வெளியிட்டிருந்ததுடன், பொலிஸ் நிலையத்துக்கு சென்று குழப்ப நிலையையும் உருவாக்கியிருந்தார்.

இந்நிலையில், பொலிஸாரை எதிர்த்து குரல் எழுப்பிய அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு எதிராக, பொலிஸாரால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாமை குறித்து தாம் கவலையடைவதாக தனுக்க ரணன்ஞக கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *