Connect with us

உலகம்

ருமேனியா எரிவாயு நிலையத்தில் வெடிவிபத்து: ஒருவர் பலி.! 33 பேர் படுகாயம்

Published

on

ருமேனியா எரிவாயு நிலையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 33 பேர் காயமடைந்துள்ளனர்.

ருமேனியாவின் புக்கரெஸ்ட் பகுதி அருகே கிரெவேடியாவில் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு நிலையத்திலேயே நேற்று இரண்டு வெடி விபத்துகள் ஏற்பட்டுள்ளன.

ருமேனியா எரிவாயு நிலையத்தில் வெடிவிபத்து: ஒருவர் பலி.! 33 பேர் படுகாயம் | Explosion At Gas Station In Romania

இந்த எரிவாயு நிலையத்தில் ஏற்பட்ட தீ அருகிலுள்ள வீடுகளுக்கு பரவியதனால் 300 மீட்டர் சுற்றளவில் உள்ள வீடுகளில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும், இதனால் சாலைப் போக்குவரத்தில் தடை ஏற்பட்டுள்ளதுடன்,மாலையில் இரண்டாவதும் வெடி விபத்து ஏற்பட்டது

இந்த வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து, மூன்றாவதாகவும் வெடி விபத்து ஏற்படலாம் என அதிகாரிகள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.

வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *