உலகம்
சீனாவில் பாரிய நிலநடுக்கம்
கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் இன்று அதிகாலை 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கத்தால் 21 பேர் காயமடைந்ததுடன் 126 கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.நிலநடுக்கத்தின் போது தூக்கத்தில் இருந்த மக்கள் கண்விழித்து வீடுகளை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சமடைந்தனர்.இந்த நிலநடுக்கத்தால் சில இடங்களில் வீடுகள் இடிந்து சேதமாகி உள்ளன.வீடுகள் உட்பட மொத்தம் 126 கட்டிடங்கள் இடிந்து சேதமான நிலையில் 21 பேர் காயமடைந்துள்ளனர்.அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் அங்கு மீட்பு பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன.அதிர்ஷ்டவசமாக உயிர் பலி எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.மேலும் சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அந்நாட்டின் நிலநடுக்க அதிர்வை பதிவு செய்யும் மையம் உறுதி செய்துள்ளது.அதாவது சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இருந்து சுமார் 300 கிலோமீட்டர் தெற்கு பகுதியில் டெசோ நகர் அமைந்துள்ளது.இந்த நகரில் இருந்து தெற்கே 26 கிலோ மீட்டர் தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் அதிகாலை 2.33 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இது ரிக்டர் அளவுகோலில் 5.5 என்ற அளவில் பதிவாகி உள்ளதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நிலநடுக்கத்தின் எதிரொலியாக பெய்ஜிங்-ஷாங்காய் ரயில்கள் மற்றும் பெய்ஜிங்-கௌலூன் ரயில்கள் உள்ளிட்ட சில வழித்தடங்களின் போக்குவரத்து சேவைகளை சீனா ரயில்வே இடைநிறுத்தியுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.